திரை
திரை, கன்னடமூலம் எஸ்.எல். பைரப்பா, தமிழில் ஜெயா வெங்கட்ராமன், விஜயபாரதம் வெளியீடு, சென்னை, விலை 300ரூ.
பைரப்பாவின் ஆவரணா (2007) என்ற நாவல் தமிழில் திரை என்ற தலைப்பில் விஜயபாரம் பதிப்பகத்திலிருந்து வெளிவந்திருக்கிறது. கத்தி மேல் நடப்பது போல்தான் ஆசிரியர் நாவலை எழுதி இருக்கிறார். கலப்புத் திருமணங்களில் மதத்தை விடக் கலாசார மற்றும் உணவுப் பழக்கங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கன்னட நாவலுக்கு நிறைய எதிர்ப்பு இருந்தபோதிலும் வாசகர் ஆதரவு அமோகமாக இருந்திருக்கிறது. ஆறு ஆண்டுகளில் முப்பது பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் மொழி பெயர்ப்புப் பிரதியில் சரியாகத் திருத்தங்கள் செய்திருக்கிலாம். நன்றி: குங்குமம், 24/11/2014.
—-
மழைக்குப் பின் பட்டுக்கோட்டை ராஜா கவிதைகள், சிவா பதிப்பகம், மன்னார்குடி, பக். 73, விலை 100ரூ.
கவித்தேராய் பவனி வரும் இந்த கவிதைத் தொகுப்பில், மரபும், புதுக்கவிதையும் சந்தமும், துளிப்பாக்களும் கலந்து ஒர கவிதை ஊர்வலத்தையே நம்முன் காட்சிப்படுத்திவிடுகிறது. இயற்கை, சமூகம், மனிதநேயம், தாய்மை, தன்னம்பிக்கை, காதல், அரசியல், ஆன்மிகம் என்று எல்லாமே அந்த ஊர்வலத்தில் ஐக்கியம். மழைக்குப்பின் அது என்னவென்று உனக்கத் தெரியும் அது அதுதான் அதுவேதான். ஒரு தேர்ந்த படிமக்காட்சிக்கு நல்ல உதாரணம். கவிமனசு கட்டுப்பாடு இல்லாதது என்பதற்கு தேகத்தை வருடிவிட்ட காற்று சுனாமியாய் சுழன்றும் அடிக்கும் என்ற கவிஞனின் சுதந்திர உள்ளமே அதற்குச் சான்று. நன்றி: குங்குமம், 24/11/2014.