கதை கதையாம் காரணமாம்
கதை கதையாம் காரணமாம், பவளசங்கர், மெட்ராஸ் பழனியப்பா பிரதர்ஸ், பக். 144, விலை 105ரூ.
உணவு சேகரிக்கும் வேலையைச் செய்ய மறுத்தது ஓர் எறும்புக்கூட்டம். வேலை செய்யும் நாள்களுக்கு மட்டுமே உணவு என்று சட்டமேற்படுத்தியது ராணி எறும்பு. குளிர்காலம மழைக்காலம வந்து வெளியில் செல்ல முடியாமல் எறும்புகளை முடக்கிப் போட்டது. வேலை செய்ய மறுத்த எறும்புக்கூட்டம் பசியால் வாட்டமுற்றது. சேமிப்பின் அவசியத்தை உணர்த்தி மன்பிபையும் அளித்த ராணி எறும்பின் தலைமைப் பண்பு சிறு துளி பெரு வெள்ளம் கதையின் அற்புதமான சாராம்சமாகும். கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது தானத்திலே சிறந்தது கண் தானம் எதை ஒரு லட்சம் கண் கருவிழிகளுக்கு 22000 கருவிழிகளே கிடைக்கின்றன. அது குறித்த முகவரி, தொலைபேசி எண், எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வெறும் தகவல்களாக மட்டும் இல்லாமல் இந்தத் தகவல்களுடன் மிகச் சிறந்த சிவபக்தனான கண்ணப்ப நாயனார் (திண்ணனார்) கதையுடன் ஒப்பிட்டு கண் தானத்திற்கு ஒரு புது பரிமாணத்தைத் தந்திருக்கிறார் ஆசிரியர். மாம்பழத்தின் வகைகள், அதிலுள்ள சத்துகள் பற்றி சொல்லிவிட்டு அதோடு இணைத்து ஒரு கதை, நியூட்டனின் புவியீர்ப்பு விசை குறித்த விதிகளைப் பற்றி விவரங்களுடன், ஒரு குரங்குக் கதை என சிறுவர்களின் அறிவுத்திறனையும், நற்பண்புகளையும் வளர்க்கும் விதரமாகவும் அவர்களை ஆர்வத்துடன் படிக்க வைக்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ள சிறந்த நூல். நன்றி: தினமணி, 15/6/2015.