விலை மதிக்க முடியாத உயிர்கள்
விலை மதிக்க முடியாத உயிர்கள், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ.
தி.மு.க.வின் இலக்கிய அணி புரவலரான முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி ஏற்கனவே 3 நூல்களை எழுதி இருந்தாலும், தற்போது ‘விலை மதிக்க முடியாத உயிர்கள்’ என்ற தலைப்பில் 19 சரித்திர பெண் மணிகளின் விலை மதிக்க முடியாத, வீரமிக்க, மனிதாபிமானமிக்க செயல்களை கவிதையாக படைத்து உள்ளார்.
இதில் பலர் தியாகங்களும், இதுவரையில் முழுமையாக வெளிவராத தியாகங்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இலங்கையில் நடந்த விடுதலை போரில் இன்னுயிர் நீத்த பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அங்கையற்கண்ணி, பூபதி, கிருஷாந்தி குமாரசாமி, துர்கா, தனலட்சுமி ஆகியோரின் வீரசெயல்கள், கருணையே உருவான அன்னை தெரசா, ‘வருத்தி, வருத்தி நாட்டை திருத்தி எழுதிய ஒருத்தி’ என்று பாடப்பட்ட இந்திரா காந்தி, ‘உன்குரல் இறைவனின் அருள்குரல்’ என்று கூறப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற இந்த பெண்மணிகள் பற்றி கவிதைகளாக எழுதி இருந்தாலும், அவை மன உணர்வுகளை தட்டி எழுப்பும் வகையில் அமைந்து உள்ளன.
ஒவ்வொரு மாதர் குல மாணிக்கங்களையும் படிக்கும்போது கண்களில் நீர் முத்துக்கள் தோன்றுவதை எவராலும் தடுக்க முடியாது.
நன்றி: தினத்தந்தி, 30/3/2016.