வாழ்வின் புதிய பாதையில் பயணிப்போம் வாருங்கள்!
வாழ்வின் புதிய பாதையில் பயணிப்போம் வாருங்கள்!, தேவிசந்திரா, மணிமேகலை பிரசுரம், விலை 80ரூ.
வாழ்வியல் மற்றும் சமூக முன்னேற்றச் சிந்தனைகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு. வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கு தன்னம்பிக்கை, தைரியம், லட்சியம் மிகவும் அவசியம் என்பதை மனதில் அழகாக விதைக்கும் விதமாக 32 கட்டுரைகளில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் தேவி சந்திரா.
நன்றி: தினத்தந்தி, 11/5/2016.
—-
ஓலைச் சுவடியின் இரகசியங்கள், முனைவர் தமிழ் இனியன், அறிவுக்கடல் பதிப்பகம், விலை 150ரூ.(ஒவ்வொன்றும்)
ஓலைச்சுவடி வடிவில் புத்தகங்கள்
ஓலைச்சுவடி போன்ற வடிவமைப்பில் 3 புத்தகங்களை அறிவுக்கடல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முதல் புத்தகத்தின் பெயர் “ஓலைச் சுவடியின் இரகசியங்கள்.” இதில் ஜோதிடம், ஆன்மிகம், மருத்துவம் பற்றிய விளக்கங்கள், கேள்வி – பதில் வடிவில் தரப்பட்டுள்ளன. அடுத்த புத்தகம் மருத்துவம் பற்றி பயனுள்ள தகவல்களைத் தருகிறது. மூன்றாவது புத்தகம் ஆன்மிக விடியல்களை விவரிக்கிறது. மூன்று புத்தகங்களும் பயனுள்ளவை. ஒவ்வொரு புத்தகத்தின் விலையும் 150ரூ.
நன்றி: தினத்தந்தி, 11/5/2016.