புதிய கல்விக் கொள்கை – மாணவர்களும் ஆசிரியர்களும் குற்றவாளிக் கூண்டிலா?
புதிய கல்விக் கொள்கை – மாணவர்களும் ஆசிரியர்களும் குற்றவாளிக் கூண்டிலா?, நா. மணி, பாரதி புத்தகாலயம், பக். 48, விலை 20ரூ.
1986 ஆம் ஆண்டிலேயே இன்றைய புதிய கல்விக் கொள்கைக்கான அடித்தளம் போடப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது கல்வியை விற்பனைச் சரக்காக்க முயற்சிக்கப்படுகிறது என்று கூறுகிறது இந்நூல்.
“பொதுப்பள்ளி முறை தூர்ந்து கிடப்பதை எவ்வாறு சரி செய்வது? மிகப் பெரும் மக்கள் திறன் உள்ள இந்திய நாட்டில் வேலை வாய்ப்புகளை எத்தகைய கல்விமுறை உருவாக்கும்? வேலைவாய்ப்பு அற்ற இன்றையப் பொருளாதார வளர்ச்சி சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது? அறிவியல் கல்வி வளர்ந்த அளவுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏன் உருவாகவில்லை?’‘ என்பது போன்ற கேள்விகளுக்குத் தேவையான தீர்வுகள்தான் இன்றைய தேவை.
ஆனால் அதற்கு மாறாக, “தற்போது வேலை வாய்ப்புள்ள, தொழில்சார்ந்த, திறன் மேலாண்மைக் கல்வி என்று பேசப்படுவதெல்லாம், சந்தையால் தீர்மானிக்கப்படுபவையாக உள்ளது. எந்த மாதிரி திறன், எந்த மாதிரி வேலை, எந்த மாதிரி தொழில் என்பதையெல்லாம் சந்தையே தீர்மானிக்கிறது. சந்தைக்குக் தக்கவாறு பொருளை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களாக கல்வி நிலையங்களை மாற்ற வேண்டும் என்கிறது கல்விக் கொள்கை. இது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. எதிர்காலத்துக்கும் நல்லதல்ல‘’ என்று கூறும் நூல்.
நன்றி: தினமணி, 14/8/2016.