கொங்கு நாட்டுப்புற இசைக்கருவிகள்
கொங்கு நாட்டுப்புற இசைக்கருவிகள், முனைவர் பெ. சுப்பிரமணியன், ராம்குமார் பதிப்பகம், விலை 300ரூ.
முனைவர் பெ. சுப்பிரமணியன், அருள்மிகு பழனியாண்டவர் கலை, பண்பாட்டுக் கல்லூரித் தமிழ்த் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாட்டுப்புறவியலில் நாட்டமும் மானிடவியலில் நேசமும் கொண்டவர். இந்நூல் கொங்கு நாட்டுப்புறங்களில் புழக்கத்தில் உள்ள இசைக் கருவிகளைப் பற்றியது.
பானைத்தாளத்துடன் தொம்மாங்கும், உடுக்கை ஒலியுடன் கதைப்பாட்டுகளும், கொம்பும் மொடா மேளமும் முழங்கும் விழாக்களும் கொங்கு நாட்டில் பிரபலம். பம்மை, உறுமி, திடும், நகார், தப்பு, பேரிகை, நாகசுரம், சங்கு, சத்தக்குழல், தாரை போன்ற இசைக்கருவிகளும் கரகாட்டம், காவடியாட்டம், கும்மி, ஒயிலாட்டம், புலிவேஷம், தடி விளையாட்டு, கருப்பணசாமி ஆட்டம் போன்றவை இங்கு இன்றும் உயிர்ப்புடன் விளங்குகின்றன.
நூலாசிரியர் சமூகப்பண்பாட்டு வரலாற்றப் பின்னணியில் இசைக் கருவிகளையும் வாசிப்ச் சூழலையும் வாய்மொழி மற்றும் நிகழ்த்துக்கலை மரபுகளையும் பழங்குடி மக்களின் பாரம்பரிய இசைகளையும் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை. சுப்பிரமணியத்துக்கு மிஞ்சிய ஆய்வுமில்லை.
நன்றி: காவ்யா, 2016.