தமிழ்நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல்
தமிழ்நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல், தமிழில் நா.முருகேசன், சாமிநாதன் பதிப்பகம், விலை 200ரூ.
இந்த நூலில் எழுதப்பட்ட திட்டங்கள், கொள்கைகள், நடவடிக்கைகள், அணுகுமுறைகள் யாவற்றிற்கும் உந்து சக்தி “அம்மா” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் ஜெயலலிதாவே ஆவார்.
அம்மாவை மையப்படுத்தியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வளர்ச்சி, நல்வாழ்வு, நலத்திட்டங்கள், மிகச்சிறந்த ஆட்சி முறை என்ற தலைப்பின் கீழ் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிற்சேர்க்கையில், அம்மாவின் வாழ்க்கைக் குறிப்பும், தமிழ்நாடு பற்றிய புள்ளி விவரங்கள், 2011-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது போன்றவை தரப்பட்டுள்ளன.
சாதனை என்பது அவரவர் பார்க்கும் பார்வையில் உள்ளது. குறைந்த தகவல்களைக் கொண்டு பலர் முழு அபிப்பிராயம் கொள்கின்றனர். இந்த நூல் முழு தகவல்களைத் தந்து முழு அபிப்பிராயம் கொள்ள உதவுகிறது. ஜெயலலிதாவின் நேர்முகச் செயலாளராகவும், தலைமைச் செயலாளராகவும் பணியாற்றிய சி.கே. கரியாலியும், எஸ்.கே.கரியாலியும், எஸ்.கே.வெற்றிவேலுவும் சேர்ந்து ‘Amma Model of Development in Tamilnadu’ என்று ஆங்கிலத்தில் படைத்ததை தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார், நா. முருகேசன்.
நன்றி: தினத்தந்தி, 28/12/2016.