சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை
சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை, சின்ரன், தமிழில் வி. விஜயபத்மா, எதிர் வெளியீடு, பக். 318, விலை 280ரூ.
சீனாவின், ஆளுங்கட்சி தலைவர்களின் மனைவியர், நகரத்தின் உச்சரிக்கப்படாத ஒதுக்குப்புற கிராமத்தின் ஏழை விவசாயியின் மனைவி என, சமூகத்தின் அனைத்து பகுதி பெண்களின் கண்ணீர் கதைகளை, அவர்களின் வாக்குமூலமாக பதிவு செய்தவர்,சின்ரன்.
வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளரான சின்ரன், சீனாவின் மறைவு பிரதேசமான, பெண்களுக்கு எதிராய் அனைத்து தளத்திலும் நடக்கும் வன்கொடுமைகளை, வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார்.
இது, உலக பெண்களுக்கு எதிரான கொடுமையாக, உலகம் அங்கீகரிப்பதோடு, ஆண்களின் வக்கிர புத்தியையும் விசாரிக்கிறது.
நன்றி: தினமலர், 16/1/2017.