நீங்கள் எந்த மரம்?
நீங்கள் எந்த மரம்?, அ. அறிவுநம்பி, சித்திரம் வெளியீடு, பக். 158, விலை 120ரூ.
மொழி, சமூகம், நாடு, மானிடர், தனி மாந்தர் ஆகிய தளங்களில் ஆசிரியர் எழுதிய கட்டுரைகள் தொகுப்பு இந்நூல்.
தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதில் உள்ள அக்கறை, பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும் என்பதில் காட்டும் முனைப்பு, மதுரையின் கடம்பவன பழமை, வரதட்சணை என்ற வியாபாரம், காலதாமதத்தைப் போக்கும் மனக்கட்டுப்பாடு, மரபுகளின் மாற்றத்தால் நன்மையா? தீமையா? என்பதைப் புலப்படுத்தும் மரபுக் கட்டுரை, தமிழுக்கு ஒளி கூட்டிய வ.சு.ப. மாணிக்கனார், அறிவியல் கூத்து, காதல், வாக்கு என்று தினமணியில் பதியம் போட்ட எண்ண விதைகள் இங்கே நூலாக மலர்ந்துள்ளது.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம் 1/2/2017.