ஸ்ரீமத் இராமாயணத்தில் நங்கையர்

ஸ்ரீமத் இராமாயணத்தில் நங்கையர், தொகுப்பாசிரியர் ஜெ. சுவாமிநாதன், பக். 221, விலை 70ரூ.

பெண்களுக்கு காலங்காலமாக அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, ஆசிரியர் இந்த நூலில் விளக்குகிறார்.‘தாய்மை’ என்பது பண்பையும், பாசத்தையும், ஒழுக்கத்தையும் தருவது என்ற விளக்கமும் உள்ளது.

ராமபிரான் கானகம் சென்ற பின்னால், புயலுக்கு பின், அமைதியானவர் கைகேயி  என்றும், அவர் செய்த ஏற்க முடியாத செயலாக, மாங்கல்யத்தை கழற்றி எறிந்ததை புராணக் கருத்துக்களில் ஆசிரியர் விளக்குகிறார்.

அதே போல ராமாயணத்தில் திருப்புமுனைப் பாத்திரமாக, ‘கூனி’ வர்ணிக்கப்படுகிறார். இளமையிலே விதவையான சூர்ப்பனகை, ‘எதிர்நிலைப்பாத்திரம்’ என்று விளக்கி, அதனால் அவர், ராமனிடம் பூண்ட அதீத அர்த்தமற்ற அன்பையும் ஆசிரியர் பதிவு செய்கிறார்.

நூலில் கம்பராமாயணப்பாடல்கள் சேர்க்கப்பட்டு இருந்தாலும், மணிப்பிரவாள நடை மற்றும் சில எழுத்துப்பிழைகள், புராணத் தகவல்கள் ஆகியவை, சற்று எளிதாக படிக்க இயலாதபடி உள்ளது. ஆனாலும், ராமாயணத்தில் வரும் அகலிகை உட்பட, அனைத்துப் பாத்திரங்களையும் விளக்கியிருப்பது நல்ல அணுகுமுறையாகும்.

நன்றி: தினமலர், 19/2/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *