உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை விட்டு விலகுவதில்லை, இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 120ரூ.
எழுத்தாளர் எஸ். செல்வசுந்தரிக்கு இது முதல் நாவல். ஆயினும், வார்த்தைகளையும், சம்பவங்களையும் செதுக்கிச் செதுக்கி, இதை ஒரு நல்ல நாவலாக உருவாக்கியிருக்கிறார்.
கதையில் முக்கிய பாத்திரங்களாக வருகிறவர்கள் திருநங்கைகள். அவர்களுடைய வாழ்க்கையை கண்ணாடி போல் பிரதிபலித்துக் காட்டுகிறது இந்த நாவல். முதல் நாவலையே வெற்றி நாவலாக உருவாக்கியுள்ள செல்வசுந்தரி பாராட்டுக்கு உரியவர்.
நன்றி: தினத்தந்தி, 1/3/2017.