பட்டாம்பூச்சி விளைவு
பட்டாம்பூச்சி விளைவு (அறிவியல் சிறு கதைகள்), க.மண, அபயம் பதிப்பகம்,
பக்.177, விலை ரூ.120.
“மனித உணர்ச்சிகளுக்கு இடமில்லாத அறிவியல் தொழில்நுட்பத் தகவல்கள்,
காய்ந்த ரொட்டிகள் 39” என்று நூலின் முன்னுரையில் கூறும் நூலாசிரியர்,
இந்நூலில் உள்ள சிறுகதைகளை காய்ந்த ரொட்டித் தகவல்களாக உருவாக்காமல்,
சுவை மிக்கதாக உருவாக்கியிருக்கிறார்.
கடந்தகாலத்துக்குச் சென்று, விருப்பப்பட்ட மிருகத்தை வேட்டையாடலாம் என்று
சென்ற ஏகாம்பரம், கடந்த காலத்துக்குச் சென்ற பின்பு, “அதில் எந்த
மாற்றத்தையும் செய்யக் கூடாது; அப்படிச் செய்தால் அந்தக் கடந்த காலத்துக்குப்
பின்பு, பலதலைமுறைகளில் ஏற்கெனவே ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
நிலைகுலைந்துவிடும் 39” என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், “தான் விரும்பிய
எதையும் செய்ய இயலாமற் போவதை பட்டாம்பூச்சி விளைவு 39” சிறுகதை
சொல்கிறது.
இவ்வாறு இதில் உள்ள எல்லாச் சிறுகதைகளும் சுவைமிக்க சிறுகதைகளாக
இருக்கும் அதே சமயம், அறிவியல் கருத்துகளை வாசிப்பவர்களின் மனதில்
உணர்வுப்பூர்வமாக பதிய வைப்பதாகவும் இருக்கின்றன.
ஐந்தாண்டுகள் நிற்காமல் தொடர்ந்து மழைபெய்யும் அயோவா கிரகத்தில் மழை
நிற்கும் இரண்டு மணி நேரங்கள் மட்டுமே சூரியனைப் பார்க்க முடியும்; அதற்குப்
பிறகு மீண்டும் மழைதான் என்று சொல்லும் “ஒரு நாள் சூரியன்(39) “வீட்டிலேயே
நினைத்த நாட்டுக்கு, ஊருக்குச் சென்று அந்த இடத்தின் இயற்கைத் தன்மைகளை
அனுபவிக்க ஏற்பாடு செய்த நர்சரியால் வந்த விளைவுகளைச்
சொல்லும்கரம்புக்காடு 9” என இத் தொகுப்பில் உள்ள 10 அறிவியல்
சிறுகதைகளும், அறிவியல் அறிவை வளர்க்கும் அற்புதமான சிறுகதைகளாகவும்,
இன்றைய வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகளைத் தூண்டுபவையாகவும்
உள்ளன.
நன்றி: தினமணி, 13/3/2017.