100 ஆண்டுகளாக பொதுச்சார்பியல்

100 ஆண்டுகளாக பொதுச்சார்பியல்,பேராசிரியர் க.மணி, அபயம் பதிப்பகம், பக்.116, விலை 100ரூ. ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சார்பியல் கோட்பாட்டைக் கண்டுபிடித்ததற்குப் பின்பு அறிவியல் உலகில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களை மிக எளியமுறையில் இந்நூல் விவரிக்கிறது. ஆகாயத்துக்கும் வடிவக் கட்டமைப்பு உண்டு; ஒருவர் எங்கேயிருக்கிறார் என்பதைப் பொறுத்து காலம் மெதுவாகவும், வேகமாகவும் நகரும்; ஒளி துகள்களால் ஆனது; ஆற்றலும் பொருளும் வேறு வேறானவை அல்ல. இரண்டும் ஒன்றே. பொருள் ஆற்றலாக மாறும். ஆற்றல் பொருளாக மாறும்; இவைதான் ஐன்ஸ்டினின் கண்டுபிடிப்புகள். நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக் கண்டுபிடிப்பை […]

Read more

100 ஆண்டுகளாக பொதுச்சார்பில்

100 ஆண்டுகளாக பொதுச்சார்பில்,பேராசிரியர் க.மணி, அபயம் பதிப்பகம், விலை 100ரூ. ஐன்ஸ்டைன் பொதுச்சார்பியல் கோட்பாட்டினை வெளியிட்டு நூறு ஆண்டுகள் முடித்துவிட்ட நிலையில், நோபல் பரிசுபெறும் அளவுக்கு அவர் சாதித்தது என்ன? அவரது கண்டுபிடிப்புகளால் மக்களுக்கு என்ன லாபம்? அவரது மூளையில் இருந்த சிறப்பு அம்சம் என்ன? ஐன்ஸ்டைன் பற்றி வித்தியாசமான கோணத்தில் விளக்கமாகச் சொல்லும் நூல். நன்றி: குமுதம், 11/10/2017.

Read more

பட்டாம்பூச்சி விளைவு

பட்டாம்பூச்சி விளைவு (அறிவியல் சிறு கதைகள்), க.மண, அபயம் பதிப்பகம், பக்.177, விலை ரூ.120. “மனித உணர்ச்சிகளுக்கு இடமில்லாத அறிவியல் தொழில்நுட்பத் தகவல்கள், காய்ந்த ரொட்டிகள் 39” என்று நூலின் முன்னுரையில் கூறும் நூலாசிரியர், இந்நூலில் உள்ள சிறுகதைகளை காய்ந்த ரொட்டித் தகவல்களாக உருவாக்காமல், சுவை மிக்கதாக உருவாக்கியிருக்கிறார். கடந்தகாலத்துக்குச் சென்று, விருப்பப்பட்ட மிருகத்தை வேட்டையாடலாம் என்று சென்ற ஏகாம்பரம், கடந்த காலத்துக்குச் சென்ற பின்பு, “அதில் எந்த மாற்றத்தையும் செய்யக் கூடாது; அப்படிச் செய்தால் அந்தக் கடந்த காலத்துக்குப் பின்பு, பலதலைமுறைகளில் ஏற்கெனவே […]

Read more

பட்டாம்பூச்சி விளைவு

பட்டாம்பூச்சி விளைவு, பேரா.க. மணி, அபயம் பதிப்பகம், பக். 177, விலை 120ரூ. அறிவியல் புனைகதைகள் தமிழில் குறிப்பிட்டு வராதது பெரும் குறையே. சுஜாதாவிற்குப் பின் பலர் முயற்சித்தும், இன்னும் முழு மூச்சுடன் இயக்க முன்வரவில்லை. பேரா.க.மணியன் இத்தொகுப்பு மூலம் ‘சயன்ஸ் ஃபிக் ஷன்’ என்ற தன்மையோடு வந்திருப்பது மகிழ்ச்சி. மாயத் தோற்றங்களைப் படைக்கலமாகக் கொண்ட அயல் உயிரிகள், மகிழ்ச்சி எந்திரம் கண்டுபிடித்தவன், வெர்ச்சுவல் ரியாலிட்டியில் சிக்கிய சிறுவர்கள் என்று பல கதைக்கூறுகள் படிக்கப் படிக்க சுவாரஸ்யம். நன்றி: குமுதம், 28/12/2016.

Read more