முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு
முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு, முனைவர் பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 65ரூ.
தமிழ்நாட்டில் தோன்றிய மிக முக்கியத் தலைவர்களில் ஒருவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். மக்களிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கு வியப்புக்கு உரியது. ஒரே சமயத்தில் பாராளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் போட்டியிடுவார். இரண்டிலும் வெற்றி பெறுவார். நேதாஜியுடன் நெருங்கிப் பழகியவர்.
ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் மணிக்கணக்கில் சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றல் படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிந்த நடையில் விறுவிறுப்பாக எழுதியுள்ளார் முனைவர் ப.பாலசுப்பிரமணியன்.
நன்றி: தினத்தந்தி, 13/9/2017.