அழிவின் விளிம்பில் அந்தமான்

அழிவின் விளிம்பில் அந்தமான், பேரா.பொ.முத்துக்குமரன், முனைவர் ம.சாலமன் பெர்னாட்ஷா, என்.சி.பி.ஹெச்., விலை 370ரூ.

இயற்கையின் தாய்மடியாக திகழ்ந்த அந்தமான் தீவு பற்றிய முழுமையான ஆவணம் இந்நூல். இயற்கை வளமிக்க ஒரு தீவு, பேராசையும் சுயநலமும் மட்டுமே கொண்ட மனிதர்களின் ஆக்கிரமிப்பால் இன்றைக்கு சிதைந்துபோன அவலத்தை தக்க வரலாற்று ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது.

வரலாற்றுச் சுவடுகளில் சோழர்களும் சைலேந்திர அரசர்களும் பலமுறை கடந்து சென்றபோதெல்லாம் சிதைவுறாத இந்த பூமி, ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் எப்படியெல்லாம் சூறையாடப்பட்டது என்பதை தெளிவாக இந்த நூல் எடுத்துரைத்துள்ளது.

படங்கள், வரைபடங்கள் யாவும் நூலாசிரியர்களின் கடும் உழைப்புக்குச் சான்று.

நன்றி: தி இந்து, 21/10/2017.

Leave a Reply

Your email address will not be published.