இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்

இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம், தொகுப்பாளர்: எஸ்.சென்ன கேசவ பெருமாள், நர்மதா பதிப்பகம், பக். 480, விலை ரூ.300.

இந்து சமயம் தொடர்பாக பல்வேறு நாளிதழ்களில் வந்த பல்வேறு தகவல்களை, கட்டுரைகளை, செய்திகளை இந்நூல் தொகுத்து தருகிறது.

இறைவனின் தன்மைகள் எவை? இந்து மதத்தின் ஆச்சாரியார்களின் தத்துவங்கள் எவை? ஆலயங்களின் அமைப்பு எவ்வாறு இருக்கிறது? ஆலயங்களில் கொண்டாடப்படும் விழாக்கள் எவை? ஆலயங்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன? வழிபடும் முறைகள், மார்க்கங்கள், அனுஷ்டானங்கள் எவை? இந்து மதம் சார்ந்த வேதங்கள், ஆகமங்கள், உபநிஷத்துகள், சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன? மெய்ஞானம், பரஞானம், அபரஞானம் என்றால் என்ன? சிறப்பு வாய்ந்த பெண் தெய்வங்கள், கிராம தேவதைகள், அவற்றுக்கான ஆலயங்கள், சைவ, வைணவ ஆலயங்கள், விநாயகர் வழிபாடு, முருகன் வழிபாடு என இந்து மதம் சார்ந்த அனைத்து தகவல்களும் வகைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளன. தேவையான தகவல்களை உடனே தெரிந்து கொள்ளலாம்.

மிக எளிமையாக ஆன்மிகத்தை விளக்கும் பகுதிகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அரிய தொகுப்பு.

நன்றி: தினமணி, 8-1-2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *