மின் கம்பியில் குருவிகள்
மின் கம்பியில் குருவிகள், சாரதா. க. சந்தோஷ், நீலநிலா பதிப்பகம் வெளியீடு,
இந்த நூலின் ஆசிரியர் சாரதா. க. சந்தோஷ் சமூக வலைதலங்களிலும் இலக்கியம் சார்ந்த அமைப்புகளிலும் முனைப்போடு இயங்கி வரும்அவர் சமீபத்தில் கவியுலகப் பூச்சோலை அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழாவில் இந்நூலை வெளியிட்டார். மின் கம்பியில் குருவிகள் என்ற இந்த நூல் ஹைக்கூ கவிதை தொகுப்பாக வெளிவந்துள்ளது.
<p style=”text-align: justify;”>கவிஞரின் இரண்டாவது நூல் இது. இந்த நூலில் பொது சிந்தனை, சமூக அக்கரை மனித நேயம் என பல தளங்களில் தன் கவிதைகளை பதிவு செய்திருக்கிறார். சுருங்கச் சொல்லி நிரம்ப யோசிக்க வைக்கும் வரிகள்.. <br />
குறிப்பாக
நட்புகளின் மனதில்
மரணித்தவன்
உயிருடன் இருக்கிறான்
முகநூல் கணக்கு..
கவிதை வரிகள் நெஞ்சை தொட்டன.
தீயில் எரிந்த பின்னும்
வேகமாக மேலெழும்புகிறது
பட்டாசு துகள்கள்..!
இந்த வரிகளில் தன்னம்பிக்கை விதைகள் தூவப்பட்டிருப்பதை காணமுடிகிறது. எழுத்து என்பது எழுத்தாளனை அடையாளப்படுத்துவதோடு.. வாசகனை தேடிக் கண்டுக் கொள்ளச் செய்யும் மந்திரம் என்றே சொல்ல வேண்டும்.
காதலை பேசும், வறுமையைச் சொல்லும், பெருமையை பறைசாற்றும், செழிப்பை காணச்செய்யும், செந்தமிழ் மொழியில் தேனமுத வரிகளால் புரட்சியும் புதுமையும் கொட்டியே கிடக்கும்.. அந்த வகையில் இந்த தொகுப்பிலும் பல்சுவை பொருளோடு.. கவிதைகள் சின்ன சின்ன விதைகளாக தூவப்பட்டிருக்கிறது. வாசகர்களின் வசம் சென்று சேரட்டும் மின்கம்பி குருவிகள். கவிஞருக்கு தினமணி இணையத்தின் வாழ்த்துகள்.
நன்றி: தினமணி, 7/2/2018.