கிரேஸியைக் கேளுங்கள்
கிரேஸியைக் கேளுங்கள், கிரேஸி மோகன், தாமரை பிரதர்ஸ் பிரைவேட் மீடியா பிரைவேட் லிமிடெட், பாகம் 1, 2, விலை 224ரூ, 180ரூ.
தமிழ் கேள்வி, பதில் துறையை வளப்படுத்தும் வகையில், கல்கி இதழில் கிரேஸி மோகன் எழுதிய கேள்வி –– பதில் பகுதி தொகுக்கப்பட்டு நுாலாக வெளிவருகிறது.
அவருக்கே உரிய குறும்பும், நகைச்சுவையும் இந்நுாலில் தொட்ட இடமெல்லாம் மின்னுகின்றன. மிக நீண்ட பதில்களும், சுருக்கமான பதில்களும் கலந்தே காணப்படுகின்றன.
அவரது எழுத்து வெளிப்பாடுகள் புதிய பாணியில் அமைந்தவை. படிக்க ரசமானவை.
கவிஞர் வாலியை, ‘கதர் ஜிப்பா அணிந்த கலைவாணி’ என்பதும், பூதக்கண்ணாடியை வைத்து துருவிப் பார்த்தாலும் சே என்று சொல்ல முடியாத ஒரே எழுத்தாளர் சோ என்பதும் உதாரணங்கள்.
உங்கள் வெற்றிக்குப் பின்னால் உள்ள பெண்மணி யார்?
தலையெழுத்து, கையழுத்து என்ன சம்பந்தம்?
விவாகரத்து ஏன் அதிகரிக்கிறது?
‘கிரேசியைக் கேளுங்கள்’ என்ற இந்நுால் தமிழில் அதிகம் வளராத கேள்வி – பதில் இலக்கியத் துறைக்கு வளம் சேர்க்கும் ஒரு புதிய படைப்பு, இளமையின் துள்ளலும், அறிவு முதிர்ச்சியின் பக்குவமும் ஒருசேரப் பொலியும் ஒரு வித்தியாசமான நுால் இது.
– திருப்பூர் கிருஷ்ணன்
நன்றி: தினமலர், 4/2/2018.