பரிபூரண அருளாளன்
பரிபூரண அருளாளன், ஆர்.வெங்கடேஷ், தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட், பக். 104, விலை 100ரூ.
திருவண்ணாமலை, பல யோகிகளையும், ஞானிகளையும் வழங்கிய அக்னி மலை. அங்கேதான் ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் உள்ளிட்டோர் வாழ்ந்தனர். உ.பி.யில் இருந்து, 1950களில், திருவண்ணாமலை வந்து, 40ஆண்டுகள், பக்தர்களுக்கு அருளியவர், யோகி ராம் சுரத்குமார். சாமி, பகவான், யோகி, விசிறி சாமியார் என்றெல்லாம் உணர்ச்சி பெருக்குடன் பக்தர்கள் வழிபட்டனர். அவரின் அருள் பெற்றோரின் அனுபவத் தொகுப்பே இந்நூல்.
நன்றி: தினமலர், 17/1/2018.