குழந்தைகளும் குட்டிகளும்
குழந்தைகளும் குட்டிகளும், ஓல்கா பெரோவ்ஸ்கயா, தமிழில் – ருக்மணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்கம் 260, விலை ரூ.180.
வீடுகளில் ஓநாய், புலி, கழுதை, குதிரை, நரி, மான் ஆகியவற்றை சிறு குட்டிகளில் இருந்து வளர்ந்து வருவதைப் பற்றிய வித்தியாமான, சுவாரசியமான அனுபவங்களை இப்புத்தகத்தில் தெரிந்து கொள்ள முடியும்.
ஓல்கா, சோன்யா, யூலியா, நத்தாஷா ஆகிய நான்கு சகோதரிகளும் இந்த விலங்குகளைக் குட்டியில் இருந்தே வளர்ப்பதும், அவற்றுடன் விளையாடுவதும், அன்பு செலுத்துவதும் சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளது.காட்டு விலங்குகள் வீட்டுச் சூழ்நிலையில் வளரும்போது அவை எவ்வாறு தம்மை மாற்றிக் கொள்ள முயலுகின்றன என்பது நூலாசிரியரின் சித்திரிப்பில் நமது கண்முன் திரைப்படமாகவே விரிகிறது.
மொழியாக்க நூல் என்பது தெரியாதவாறு சரளமான நடையில் பயணிக்கிறது.சிறார்கள் மட்டுமின்றி பெரியவர்களும் படித்து மகிழும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
ஆங்காங்கே இடம் பெற்றுள்ள ஓவியங்கள் புத்தகத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கின்றன. இதனை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அனைத்து விலங்குகளோடும் இதுவரை இல்லாத பாசமும், தோழமை உணர்வும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி: தினமணி, 4/6/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818