ஒலிம்பிக்ஸ் விளையாட்டும், உலக ஜாம்பவான்களும்
ஒலிம்பிக்ஸ் விளையாட்டும், உலக ஜாம்பவான்களும், நா.விஜயரெகுநாதன், டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிமிடெட், பக்.144, விலை ரூ.125.
கிரேக்கத்தில் தொடங்கிய பழங்கால ஒலிம்பிக் வரலாறு, தொடக்கத்தில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, மீறிப் பார்க்கும் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, நவீன ஒலிம்பிக்கின் வரலாறு, ஒலிம்பிக்கில் படைக்கப்பட்ட சாதனைகள், சுவாரஸ்யமான சம்பவங்கள், பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றை நூலாசிரியர் அற்புதமாகப் பதிவு செய்துள்ளார்.
பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் சிந்து உள்ளிட்ட வீரர்கள் படைத்த சாதனை, ஒலிம்பிக்கில் இந்தியாவின் நிலை, ஹாக்கியில் இந்தியாவின் சாதனை, தயான் சந்த், தன்ராஜ் பிள்ளை, பாஸ்கரன் போன்ற ஹாக்கி வீரர்களைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
உலகின் மின்னல் வேக மனிதரான உசேன் போல்ட் (தடகளம்), ஒலிம்பிக்கின் தங்க மகன் மைக்கேல் பெல்ப்ஸ் (நீச்சல்), ஜாம்பவான் டான் பிராட்மேன் (கிரிக்கெட்), மைக்கேல் ஜோர்டான் (கூடைப்பந்து), மார்ட்டினா நவரத்திலோவா (டென்னிஸ்), ஸ்டெஃபி கிராஃப், டைகர் உட்ஸ் (கோல்ஃப்) போன்றவர்களைப் பற்றி இந்நூலின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
செஸ் விளையாட்டைப் பற்றி குறிப்பிட்டுள்ள நூலாசிரியர், உலக செஸ்ஸில் ஐரோப்பியர்களை அதிர வைத்த ஆனந்தைப் பற்றி பெரிய அளவில் எதையும் பதிவு செய்யவில்லை. உலக கால்பந்து விளையாட்டைப் பற்றி குறிப்பிடும் புத்தக ஆசிரியர், பீலே, மாரடோனா, லயோனல் மெஸ்ஸியோடு நிறுத்திக் கொண்டுள்ளார். இவர்களுக்கு நிகரான சாதனைகளைப் படைத்த ஏராளமான வீரர்கள் இருந்தபோதிலும், அவர்களைப் பற்றி ஆசிரியர் குறிப்பிடாதது ஒரு குறையே.
நன்றி: தினமணி,16/7/2018
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027015.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818