மனிதனை இயக்குவது மனமா மூளையா?
மனிதனை இயக்குவது மனமா மூளையா?, ஏ.வி.ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி மோகன், நலம், பக்.128, விலை ரூ.125.

மனிதனுக்கு வெளியே நிகழ்கிற ஒவ்வொன்றும் மனிதனின் மூளையில் ஏற்படுத்துகின்ற மாற்றங்களையும் , மூளையில் ஏற்படுகின்ற மாற்றங்களால் உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களையும் இந்நூல் அறிவியல் அடிப்படையில் விளக்குகிறது.
யோகாசனம், தியானம், இசை கேட்பது, வழிபடுவது ஆகியவை மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றியும் அவை நமது செயல்களில் மாற்றங்களை ஏற்படுத்த தூண்டுகோலாக இருப்பதையும் நூலாசிரியர்கள் விளக்கியிருக்கின்றனர்.
ஆண் மூளை, பெண் மூளை இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள், தனித்தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. ஓர் ஆணின் முகத்தைப் பார்த்து பொய் சொல்வது எளிது; ஆனால் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்துப் பொய் சொல்ல முடியாது. ஏனெனில் ஆணை விட பெண்களுக்கு தகவல்களை மட்டுமல்ல, எதிரில் பேசுபவரிடமிருந்து வரக் கூடிய பல்வேறு சமிக்ஞைகளை உணரக் கூடிய திறன் அதிகம் என்கிறார்கள் நூலாசிரியர்கள்.
வயிறு பெருக்க ஆரம்பிக்கும்போது, அது மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் மேலும் தொப்பை பெருக்கும். மறதி நோய்கள் வர வாய்ப்புகளும் உண்டு என தொப்பைக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பை நூலாசிரியர்கள் விளக்குகிறார்கள்.
மனிதனை இயக்குவது மனமே என்று நூலின் இறுதியில் தீர்ப்பு சொல்கிறார்கள். அதனால் மனதை நல்லமுறையில் பேணிக் காக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறார்கள்.
நன்றி: தினமணி, 6/8/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/Manidanai_Iyakkuvathu_Manama_Moolaiya.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818