ஒரே கல்லில் 13 மாங்காய்,
ஒரே கல்லில் 13 மாங்காய், க.விஜயகார்த்தி கேயன் ஐ.ஏ.எஸ்., விஜயா பதிப் பகம், பக்.144, விலை ரூ. 120.
தலைப்பை வித்தியாசமாக வைத்திருப்பதன் காரணம் இந்த எண் ராசியில்லை என பலராலும் கூறப்படுவதைத் தடுக்கவே என ஆரம்பித்து, 14 அத்தியாயங்களாகப் பிரித்து சுவையான நடையில் இந்நூலை எழுதியுள்ளார் நூலாசிரியர்.
தனது அடிப்படைத் தொழிலான மருத்துவத்துறையையும் மறக்காமல் அவ்வப்போது இடையிடையே பல தகவல்களைப் பேச்சு வழக்கில் நகைச்சுவையுடன் அளித்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது.
கணக்கு-வழக்கு பார்த்து வாழ்க்கை நடத்துவது தேவை என ஆரம்பித்து இன்றைய வாழ்க்கை கணினிமயமாகிவிட்டது வரை அன்றாட வாழ்வில் நடக்கும் விஷயங்களைத் தெளிவாக விவரித்துள்ளார். சின்ன விஷயங்களைக் கூட அலட்சியப்படுத்தக் கூடாது என்பதற்கு அவர் அளித்துள்ள ஓர் உதாரணம் புதிதானது. பைனாகுலர் வைத்திருக்கும் பெட்டியை எடுக்க சாவி இல்லாததால் டைட்டானிக் கப்பல் கவிழ்ந்தது என்ற தகவல் அதிர்ச்சியானது.
‘நான் யார் தெரியுமா?‘ என்ற அகந்தையைத் தள்ளிவைத்து மற்றவர்களைப் பார்த்து வாழுங்கள் என்ற அறிவுரை மனதில் நிற்கிறது. மனச்சோர்வாக இருப்பவர்களுக்கு அருமருந்தாகும் நூல் இது.
நன்றி: தினமணி, 6/8/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818