பேரிடர்களை எதிர்கொள்வோம்
பேரிடர்களை எதிர்கொள்வோம், ச.வைரவராஜன், சங்கமித்ரா பதிப்பகம், விலை 250ரூ.
அறிவியல் துணையுடன் மனிதன் உலகையே ஆண்டு வந்தாலும் இயற்கையை மட்டும் அவனால் வெல்ல முடியவில்லை. மானுட சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் ஆங்காங்கே அவ்வப்போது நேரிடும் இயற்கை பேரிடர்கள் இந்த உண்மையை உரக்கச்சொல்லிவிடுகின்றன.
நிலநடுக்கம், புயல், சூறாவளி, சுனாமி, காட்டுத்தீ என மனிதனை சோதிக்கும் இடர்பாடுகள் ஏராளம். இத்தகைய பேரிடர்கள் நேரிடுவதை தடுக்க முடியாவிட்டாலும், அவற்றில் இருந்து சமயோஜிதமாக தப்பிக்க முடியும். அதற்கான வழிகாட்டிதான் இந்த நூல். மனிதனை அச்சுறுத்தும் ஒவ்வொரு பேரிடருக்குமான காரணம், அவற்றின் தன்மைகள், அவற்றை எதிர்கொள்ளும் வழிகள், தப்பிக்கும் வழிமுறைகள், நிவாரண நடவடிக்கைகள் என அனைத்து அம்சங்களையும் விவரித்துள்ளார் ஆசிரியர்.
இயற்றை பேரிடர்களில் இருந்து தற்காத்துக்கொள்ள, மக்கள் வானிலை எச்சரிக்கை குறித்த விழிப்புணர்வை பெற வேண்டும் என அறிவுறுத்தும் ஆசிரியர், பள்ளிகளில் இருந்தே பேரிடர் மேலாண்மை குறித்து குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்.
பேரிடர் மேலாண்மை குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இந்த நூல் ஒரு அரிய பொக்கிஷம் என்றால் மிகையல்ல.
நன்றி: தினத்தந்தி, 24/10/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818