ஸ்ரீகுணமிலி
ஸ்ரீகுணமிலி, பதிப்பாசிரியர் சுகவன முருகன், மங்கையர்க்கரசி பதிப்பகம், விலை 750ரூ.
கட்டுரை எழுபது
தொல்லியல் அறிஞர் வீரராகவன் எழுபதாம் வயது நிறைவையொட்டி வெளிவந்திருக்கும் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ள இத்தொகுப்பில் ‘தொன்மம்’ என்ற தலைப்பின்கீழ் சமகால வரலாற்று ஆய்வாளர்களின் 37 ஆய்வுக் கட்டுரைகளும் ‘அமரம்’ என்ற தலைப்பின்கீழ் 7 ஆய்வுக் கட்டுரைகளும் ‘சுற்றம்’ என்ற தலைப்பின்கீழ் நண்பர்களின் 28 ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
வீரராகவன் படியெடுத்த கல்வெட்டுகள், கண்டுபிடித்த தொல்லியல் சான்றுகள் பற்றிய பதிவுகளும் உண்டு. வரலாற்று ஆர்வலர்கள் தவறவிடக் கூடாத கட்டுரைத் தொகுப்பு இது.
நன்றி: தி இந்து, 2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818