நடைவழிக் குறிப்புகள்
நடைவழிக் குறிப்புகள், சி.மோகன், பரிசல் வெளியீடு, விலை 150ரூ.
கவனிக்க மறந்த ஆளுமைகள்
சமூகம், அரசியல், கலை, இலக்கியம், கலாச்சாரம், சிந்தனை ஆகிய தளங்களில் தீவிரத்தோடு இயங்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளை இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ‘புதிய பார்வை’ இதழில் தொடராக எழுதினார் சி.மோகன். ஆளுமைகள் குறித்த அரிய தகவல்களை இத்தொடர் மூலம் வெளிக்கொண்டுவந்தார். அப்போது இத்தொடர் பெரும் வரவேற்பு பெற்றது. கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டிய புத்தகம் என்றும் மாணவச் சமூகம் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என்றும் இந்நூல் சிலாகிக்கப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பின்பாக இப்போது, கூடுதலாக ஏழு ஆளுமைகள் குறித்த கட்டுரைகளுடன் விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பாக வெளியாகியிருக்கிறது ‘நடைவழிக் குறிப்புகள்’.
– கதிரவன்
நன்றி: தமிழ் இந்து,23/2/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027984.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818