உறவே உதவும்

உறவே உதவும், ரவணசமுத்திரம் நல்லபெருமாள்,ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை: ரூ.150.

சந்தக் கவிதைகள்

பள்ளி ஆசிரியராகவும் கல்வித் துறை பயிற்சியாளராகவும் பல்வேறுபட்ட அனுபவங்களுக்குச் சொந்தக்காரர் நல்லபெருமாள். 80 வயதில் தனது கவிதை முயற்சிகளுக்கு நூல்வடிவம் கொடுத்திருக்கிறார். விநாயகர், முருகன், கண்ணன் துதிப் பாடல்கள்; வாழ்வின் நிலையாமையைப் பேசும் தத்துவப் பாடல்கள்; தமிழையும் தமிழ்க் கவிஞர்களையும் போற்றும் கவிதைகள்; குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அனுபவப் பதிவுகள், பள்ளிக் குழந்தைகளுக்குப் பயன்படும் சந்தப் பாடல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்பு இது. பல பாடல்கள் மரபுக் கவிதைகளை வாசிக்கும் அனுபவத்தை அளிக்கின்றன.

– ராசய்யா

நன்றி: தமிழ் இந்து, 30/3/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000028043.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *