புண்ணியம் சேர்க்கும் புனித யாத்திரை

புண்ணியம் சேர்க்கும் புனித யாத்திரை, பத்மாவதி குமரன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்,  பக்.168, விலை ரூ.250.

இந்தியா மற்றும் இலங்கையில் அமைந்துள்ள சக்தி பீடங்கள், திருக்கோயில்களின் உன்னதமான தகவல்கள், (புகைப்படங்களுடன்) அடங்கிய அற்புதமான ஆன்மிகப் பயண நூல்.

சதி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களே சக்தி பீடங்களாக விளங்குகின்றன. சதி தேவியின் மண்டை ஓடு விழுந்த இமாச்சலில் உள்ள சாமுண்டா தேவி கோயில் தொடங்கி, அம்மையின் திரு நாக்கு விழுந்த வஜ்ரேஸ்வரி (தாரா தேவி), ஜ்வாலாமுகி, பாதம் விழுந்த சிந்த்பூர்ணி (சின்ன மஸ்த்திகா), கண் விழுந்த தலமான நைனா தேவி ஆலயம், சண்டிகரிலுள்ள மணி மஜ்ராவில் மானசா தேவி கோயில், தேவியின் தலை விழுந்த இடமான உத்திரபிரதேசம் சகாரான்பூர் சாகம்பரி கோயில், காசி (வாரணாசி) விசாலாட்சி, கயாவின் மங்களகௌரி கோயில், மீர்ஜாபூர் வித்தியாவாசினி, ஜலந்தர் திரிபுரமாலினி, காஷ்மீர் கீர்பவானி, கல்கத்தா காளி, கௌஹாத்தி காமாக்யா தேவி, அம்பாளின் இதயம் விழுந்த குஜராத் அம்பாஜி மாதா, ஜெய்பூர் சாவித்திரி, ஸ்ரீசைலம் பிரமராம்பிகை, சிம்மாசலம் புருஹுதிகா தேவி, த்ராக்ஷôராமம் மாணிக்காம்பாள் என பட்டியல் நீள்கிறது.

இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற ஜோதிர்லிங்க தலங்களுடன் பல முக்கியத் திருத்தலங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அதோடு, கம்போடியா, ஆஸ்திரியா, பாலி தீவு, மலேஷியா, மொரீஷியல் போன்ற நாடுகளில் சிறப்பாக விளங்கும் இந்து கோயில்களும் இதில் இடம் பெற்றுள்ளன. கோயில்களின் புராண வரலாற்றுடன் பல ஆன்மிகத் தகவல்களையும் சேர்த்துச் சுவாரஸ்யமாக ஆக்கப்பட்டுள்ள இந்நூல், ஆன்மிக அன்பர்களுக்கு நல்ல வழிகாட்டி என்றால் மிகையில்லை.

நன்றி: தினமணி, 8/4/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *