புண்ணியம் சேர்க்கும் புனித யாத்திரை

புண்ணியம் சேர்க்கும் புனித யாத்திரை, பத்மாவதி குமரன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட்,  பக்.168, விலை ரூ.250. இந்தியா மற்றும் இலங்கையில் அமைந்துள்ள சக்தி பீடங்கள், திருக்கோயில்களின் உன்னதமான தகவல்கள், (புகைப்படங்களுடன்) அடங்கிய அற்புதமான ஆன்மிகப் பயண நூல். சதி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களே சக்தி பீடங்களாக விளங்குகின்றன. சதி தேவியின் மண்டை ஓடு விழுந்த இமாச்சலில் உள்ள சாமுண்டா தேவி கோயில் தொடங்கி, அம்மையின் திரு நாக்கு விழுந்த வஜ்ரேஸ்வரி (தாரா தேவி), ஜ்வாலாமுகி, பாதம் விழுந்த சிந்த்பூர்ணி […]

Read more

இருள் நீக்கி

இருள் நீக்கி, தொகுப்பாசிரியர் ஆர். கரிகாலன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட், பக். 208, விலை 95ரூ. சனாதன தர்மம் என்று கூறப்படும் ஹிந்து மதம், பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றியது என்றாலும், சுமார் 1500 வருடங்களுக்கு முன்தோன்றிய ஆதிசங்கரரால் இம்மதம் மறுமலர்ச்சி கண்டது. அவர் உருவாக்கிய காஞ்சி சங்கர பீடத்தின் தற்போதைய பீடாதிபதியான ஸ்ரீஜெயந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஹிந்து மதம் குறித்து எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கு பல்வேறு சமயங்களில் அளித்த விளக்கங்களையெல்லாம், இந்நூலாசிரியர் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஹிந்து […]

Read more

நத்தையோட்டுத் தண்ணீர்

நத்தையோட்டுத் தண்ணீர், கே.ஜி. பப்ளிகேஷன்ஸ், 31, பூக்குளம் புதுநகர், கரந்தை தஞ்சாவூர், பக். 80, விலை 60ரூ. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது போலவே எல்லாமும் நமக்குள்ளேயே நடந்தேறி விடுவதை நாகரிகமான முறையில் நம்முன் எடுத்துவைக்கிறார் ஹரணி. வாசிப்பு அனுபவம் நம்மை அடையாளப்படுத்தும் என்கிறார். சுட்டிக் காட்டுவது நடப். சுடப்படுவத நட்பல்ல என்கிறார். காற்று நுழைய முடியாத இடத்தில் கூட கடித உணர்வுகளை நுழைக்கிறார். சந்தர்ப்பவாதிகளை மன உறுதியோடு தவிர்க்க உதவுகிறார். வழிகாட்டிகளையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகளையும் இனம் காண வைக்கிறார். மொத்தத்தில் ஹரணி […]

Read more