நத்தையோட்டுத் தண்ணீர்
நத்தையோட்டுத் தண்ணீர், கே.ஜி. பப்ளிகேஷன்ஸ், 31, பூக்குளம் புதுநகர், கரந்தை தஞ்சாவூர், பக். 80, விலை 60ரூ.
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது போலவே எல்லாமும் நமக்குள்ளேயே நடந்தேறி விடுவதை நாகரிகமான முறையில் நம்முன் எடுத்துவைக்கிறார் ஹரணி. வாசிப்பு அனுபவம் நம்மை அடையாளப்படுத்தும் என்கிறார். சுட்டிக் காட்டுவது நடப். சுடப்படுவத நட்பல்ல என்கிறார். காற்று நுழைய முடியாத இடத்தில் கூட கடித உணர்வுகளை நுழைக்கிறார். சந்தர்ப்பவாதிகளை மன உறுதியோடு தவிர்க்க உதவுகிறார். வழிகாட்டிகளையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகளையும் இனம் காண வைக்கிறார். மொத்தத்தில் ஹரணி தம் மனவோட்டத்தை நத்தையோட்டுத் தண்ணீரில் வானம் பார்ப்பதுபோல் பகிர்ந்து கொள்கிறார்.
—-
ஸ்ரீமத் நாராயணீயாம்ருதம், எஸ். சுந்தரராஜன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட், 134 (58/2), டி.எஸ்.வி.கோயில் தெரு, மைலாப்பூர், சென்னை 4. பக். 96, விலை 30ரூ.
விஷ்ணு பகவானின் அவதார மகிமைகளை விளக்கும் மூலநூல் ஸ்ரீமத் பாகவதம் ஆகும். இந்நூலைப் பின்பற்றி விஷ்ணு பக்தரான நாராயண பட்டதிரி நாராயணீயம் என்ற வழிநூலை இயற்றினார். விஷ்ணு பக்தர்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்ட நூல் அது. அப்படிப்பட்ட நாராயணீயம் நூலை சுருக்கமாக எளிய தமிழில் கவிதை நடையில் ஸ்ரீமத் நாராயணீயாம்ருதம் என்ற பெயரில் தந்துள்ளார் நூலாசிரியர். பகவத் வைபவம் தொடங்கி கேசாதி பாத வர்ணனை வரை 100 பாகங்களைக் கொண்ட இச்சிறிய நூல் பாகவதத்தை எளிமையாக கற்றுணர்ந்த திருப்தியைத் தருகிறது. நூலுக்கு உரையெழுதி நூல் வடிவினைப் பெரிதாக்கினால் இன்னும் இந்நூல் சிறப்பு பெறும். நன்றி: குமுதம், 21/8/2013