நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்
நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்,சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், பக்.240, விலை ரூ. 150.
வாழ்க்கை என்பது பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு எனலாம். அதை நம் மனதுக்கு நெருக்கமாக உணரும் வகையில் தொகுத்துத் தந்திருப்பது இந்நூலின் சிறப்பம்சம். செயற்கரிய செயல்களைச் செய்தவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான 200 சம்பவங்கள் இந்நூலில் மணம் வீசுகின்றன. சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் குடும்பத்துக்கு பசும்பொன்தேவர் மரியாதை கொடுத்த சம்பவத்திலிருந்து தொடங்கும் இத்தொகுப்பில், சிறுவனிடம் பாடம் கற்ற தமிழ்த்தாத்தா உ.வே.சா, அப்துல்கலாமின் பெருந்தன்மை, தியாக சீலர் கக்கன், சாதிகளை வெறுத்த ஜீவா, திரு.வி.க.வின் சிவத்தொண்டு, அழகப்பசெட்டியாரின் தீர்ப்பு, ஜி.டி.நாயுடுவின் கண்டிப்பு, ராகத்தை அடகு வைத்த பாகவதர், நேதாஜி காப்பாற்றிய கைப்பிடி மண், டால்ஸ்டாயின் பணிவு, பெரியாரின் திருமண வாழ்த்து, அண்ணா கேட்ட உதவி, காந்தியின் தன்னடக்கம், அகம்பாவம் அகற்றிய ராமானுஜர், எம்ஜிஆரின் நன்றியுணர்வு, தனிமனிதருக்கு சொந்தமான ரயில் உள்ளிட்டவை நமக்குப் புதிய வரலாற்றுச் செய்திகளைத் தருகின்றன. இதைப் படிக்கும் போது இந்நூலில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளுக்குள் நாம் இழுத்துச் செல்லப்படுவதைத் தவிர்க்க முடிவில்லை. இந்நூல், மாணவர்கள், இளைஞர்களுக்கு காலக்கண்ணாடி. இலக்கியவாதிகள், மேடைப்பேச்சாளர்களுக்கு கருத்துப் பெட்டகம்.
நன்றி: 3/6/19, தினமணி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027649.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818