ஆங்கில இலக்கணத்தை எளிமையாகச் சொல்லித்தரவா?
ஆங்கில இலக்கணத்தை எளிமையாகச் சொல்லித்தரவா?, மு.ஜோதி சுந்தரேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 160ரூ.
ஆங்கில இலக்கணப்பாடம் என்றால் காததூரம் ஓடும் மாணவ மாணவிகளையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. கிராமப் புறங்களில் தமிழ் மொழியில் படிக்கும் மாணவர்களும் ஆங்கில இலக்கணத்தை மிக எளிதாகப் புரிந்து கொண்டு படிப்பதன் மூலம் ஆங்கில இலக்கணத்தில் நிபுணத்துவம் பெற முடியும் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது.
சின்னஞ் சிறிய வாசகங்கள் மூலம் இலக்கணத்தை கற்றுத் தருவதோடு முக்கியமான பல வார்த்தைகளின் வினைச் சொற்களுக்கு தமிழில் பொருள் தரப்பட்டு இருப்பதால் அவை படிக்க எளிமையாக இருக்கின்றன.சிறிய வாக்கியங்களைக் கொண்டு கடிதம் எழுதுவதற்கு எடுத்துக்காட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818