இலக்கிய இன்பம்
இலக்கிய இன்பம், மு.சு. கன்னையா, சங்கர் பதிப்பகம், விலை 220ரூ.
வாய்ச் சுவையில் விலங்குகள் மகிழும். செவிச் சுவையில் மனிதர் மகிழ்வர். இலக்கியச் சுவை நம்மை தெய்வ நிலைக்கு உயர்த்தும். இனிமையான, 25 இலக்கியக் கட்டுரைகள் இந்நுாலில் படிப்போருக்கு இன்பம் கொடுக்கும்.
திருக்குறளைப் பற்றி, 12 கட்டுரைகள் பேசுகின்றன. புறநானுாற்றில், 243 தொடித்தலை விழுத்தண்டினார் எனும் முதியவர் பாடிய இளமையைப் போற்றும் பாடல் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நற்றிணை, ஐங்குறுநுாறு, முல்லைப்பாட்டின் முதுமை ஒப்பு நோக்கப்படுகிறது.
காமத்துப் பாலா? இன்பத்துப் பாலா? மூன்றாம் பாலின் பெயர் ஆராய்ச்சி, ஆவின் பாலின் சுவைபோல் நீள்கிறது. காமம் வடசொல். இன்பம் தமிழ்ச் சொல். 34 இடங்களில் இன்பத்துப்பாலில், ‘காமம்’ என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. காமம் காரணம், இன்பம் அதன் பயன். முடிவில் காமத்துப் பால் தான் மூன்றாம் பால் என்று பட்டிமன்றத் தீர்ப்பாக ஆசிரியர் கூறியுள்ளார்.
பாரதிதாசன் பாடல்களில் நகைச்சுவை, தனிப்பாடல்களில் விடுகதைகளின் தாக்கம், பனை மரம் ஆகிய கட்டுரைகளுடன் கொண்ட ஆய்வு நுாலாக மிளிர்கிறது.
– முனைவர் மா.கி.இரமணன்
நன்றி: தினமலர்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818