கற்றுக்கொடுக்கிறது மரம்
கற்றுக்கொடுக்கிறது மரம், ஜெயபாஸ்கரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை ரூ: 150
ஹைக்கூ விளக்கம்
தமிழில் குறிப்பிடத்தக்க ஹைக்கூ கவிஞராக அறியப்படுகிற லிங்குசாமியின் 15 ஹைக்கூ கவிதைகளை எடுத்துக்கொண்டு, அக்கவிதைகளின் அகவெளிப் பரிமாணங்களைப் பதிவுசெய்திருக்கிறார் ஜெயபாஸ்கரன்.
வாசகருக்குள் ஒரு கவிதை ஏற்படுத்துகிற அதிர்வுகள் அந்தந்த வாசகருக்குரிய உள்வாங்கும் சக்தியையும் ரசனையையும் உள்ளடக்கியதாக அமையும். இந்த நுட்பத்தைக் கைக்கொண்டு விஸ்தரித்துச் சொல்லப்படுகிற விளக்கம்தான் இந்நூல்.
‘கூழாங்கல்லில் தெரிகிறது/ நீரின் கூர்மை’ என்கிற லிங்குசாமியின் கவிதையைப் பற்றி கூறும்போது ‘காண்பதற்குக் கண்கள் இல்லாமல், வடிமைக்க உளியும் சுத்தியலும் இல்லாமல், அவற்றைப் பற்றிப் பிடிக்கக் கைகள் இல்லாமல் நீர் செதுக்கி வைத்திருக்கிற வழவழப்பான, அழகழகான கூழாங்கற்களைக் காட்சிப்படுத்தி நீரின் கூர்மையை உறுதிசெய்கிறார் லிங்குசாமி’ என்று ஜெயபாஸ்கரன் சொல்லும்போது கவிதையின் மீது கூடுதல் பாரம் வந்து உட்கார்ந்துவிடுகிறது.
– மானா பாஸ்கரன்
நன்றி: தமிழ் இந்து, 12/10/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818