கேம் சேஞ்சர்ஸ்
கேம் சேஞ்சர்ஸ், உலகை மாற்றயி ஸ்டார்ட் அப்களின் கதை, கார்க்கிபவா, விகடன் வெளியீடு, விலை 240ரூ.
மின்னல் போன மனதில் சட்டென்று தோன்றும் வித்தியாசமான யோசனையை ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுத்தி, முன்னேற்றம் காணும் தொழில்நுட்பம் ஸ்டார்ட் அப் என்று கொண்டாடப்படுகிறது என்பதை இந்த நூல் சிறப்பாக பதிவு செய்து இருக்கிறது.
தற்காலத்தில் தவிர்க்க முடியாத சேவைகளாக விளங்குவதோடு, ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, மிக அதிக அளவு பொருளீட்டும் நிறுவனங்களான ஊபர், ஸ்விக்கி, பிளிப்கார்ட், அமேசான், பே டிஎம் மற்றும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ரெட் பஸ் போன்ற ஸ்டார்ட் அப்கள் எவ்வாறு தோன்றின? அவைகள் சந்தித்த இடர்பாடுகள், இறுதியில் அடைந்த வெற்றி ஆகியவற்றை இந்த நூல் விரிவாகச் சொல்கிறது.
35 நிறுவனங்களின் திடீர் புரட்சி பற்றி ஆசிரியர் கொடுத்து இருக்கும் முழுமையான தகவல்கள் படிக்கும்போது வியப்பை அளிக்கின்றன. இதில் இடம் பெற்றுள்ள பல்வேறு நிறுவனங்கள் காலப்போக்கில் மாறலாம் என்பதை உணர்ந்தே எழுதி இருப்பதாகக் கூறும் ஆசிரியர், இந்த நிறுவனங்களைத் தொடங்கியவர்கள் நமது வாழ்வை எவ்வாறு மாற்றி எழுதினார்கள் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு, அதுபோல நாமும் வெற்றி பெற வேண்டும் என்று கூறி இருக்கும் கருத்து மிக சரியானது ஆகும்.
நன்றி: தினத்தந்தி, 9/10/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818