மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும்
மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும், சர்மிலா வினோதினி, பூவரசி பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ.
ஈழத்தைச் சேர்ந்த படைப்பாளி சர்மிலா வினோதினியின் வித்தியாசமான கதை தொகுப்பான இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவிதமாக காணப்படுகின்றன.
பெரும்பாலான கதைகள், இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போருக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்களையும், போர் ஏற்படுத்திய இழப்புகள், மற்றும் ரணங்களை மையப்படுத்தி இருப்பதால் அவற்றைப் படிக்கும் போது மனம் கனக்கிறது.
இந்தக் கதைகளின் வரிகளில் வார்த்தை ஜாலங்கள் இல்லை. ஆனால் கதைகயை நகர்த்திச் செல்லும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் ஏற்ற வர்ணிப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. நெருடல், நீங்க போங்க ராசா, உப்புக் காற்றில் உலரும் கண்ணீர் போன்ற கதைகள் நெஞ்சைவிட்டு அகலாதவை. ஈழத் தமிழில் எழுதப்பட்ட இந்த நூலில் உள்ள 10 கதைகளும் நன்கு உணர்ந்து ரசித்துப் படிக்கும் வகையில் உள்ளன.
நன்றி: தினத்தந்தி, 2/10/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818