சங்கமி
சங்கமி : பெண்ணிய உரையாடல்கள் – தொகுப்பாசிரியர்கள், ஊடறு றஞ்சி, புதியமாதவி, காவ்யா, பக்.372, விலை ரூ.400.
பெண்கள் சமூகத்தாலும் கூடவே ஆணாதிக்கத்தாலும் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில் பெண்ணியச் சிந்தனைகள் வளர்ந்து வந்திருக்கின்றன. சமகாலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் மாறுபடுகின்றன. அதையொட்டி பெண்ணியச் சிந்தனைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இலங்கையில் இனப் போராட்டத்தின்போது ஆயுதம் தாங்கிப் போராடிய பெண்கள், ராணுவத்தால் பாலுறவுத் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள், ஆப்கானிஸ்தானத்தில் அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பு சக்திகளின் தாக்குதலினால் இடம்பெயர்ந்து வேறுநாடுகளில் சென்று வாழும் பெண்கள், சாதி ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் பெண்கள், மதவெறியால் பாதிக்கப்படும் பெண்கள் என பெண்களுக்கு நிகழும் பாதிப்புகள் பெண்ணியச் சிந்தனைகளின் வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றன.
ஆணாதிக்க எதிர்ப்பு, ஆளும் சக்திகளின் எதிர்ப்பு என்ற அடிப்படையில், பல்வேறு பண்பாட்டு, உளவியல், கருத்தியல்ரீதியான பெண்ணியச் சிந்தனைகள் வளர்ந்திருப்பதை இந்நூலில் இடம் பெற்றுள்ள பெண்களின் நேர்காணல்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
இன்றைய குடும்ப அமைப்பு, பாலுறவு குறித்த கருத்துகள் பதிவு பெற்றிருக்கின்றன. இந்நூலில் இடம் பெற்றுள்ள வ.கீதா, அம்பை, மங்கை, புதிய மாதவி, சிவகாமி, ஒüவை, ஹெர்டா முல்லர், மலாலாய் ஜோய் உள்ளிட்ட 33 பெண் ஆளுமைகளின் நேர்காணல்கள் பெண்ணியம் சார்ந்த ஆழமான சிந்தனைகளைத் தூண்டுகின்றன.
நன்றி: தினமணி, 18/11/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818