ஒளி வித்தகர்கள்
ஒளி வித்தகர்கள் – பாகம் 1, தமிழில்: ஜா.தீபா, டிஸ்கவரி புக் பேலஸ், பக்.160, விலை ரூ.150.
உலக அளவில் பிரபலமான திரைப்பட ஒளிப்பதிவாளர்களில் ஏழுபேரின் பேட்டிகள் அடங்கிய நூல். MASTERS OF LIGHT என்ற ஆங்கிலநூலின் ஒரு பகுதி தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. காந்தி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பில்லி வில்லியம்ஸ், எக்ஸார்சிஸ்ட் ஒளிப்பதிவாளர் ஓவன் ராய்ஸ்மன், தி புளு லாகூன் ஒளிப்பதிவாளர் நெஸ்டர் ஆல்மன்ட்ராஸ் உள்ளிட்ட ஏழு ஒளிப்பதிவாளர்களின் திரைமொழி குறித்த உரையாடல்கள் கருத்தைக் கவர்கின்றன.
இயக்குநர்தான் படத்தின் ஆணிவேர். இயக்குநரின் கற்பனையையும், பார்வையையும் புரிந்து கொள்வதில்தான் ஒளிப்பதிவாளரின் பொறுப்பு இருக்கிறது என்று கூறும் ஆர்டினரி பீப்பிள் பட ஒளிப்பதிவாளர் ஜான் பெய்லியின் கருத்து நூறு சதவீதம் ஏற்புடையது.ஜான் அலான்சோ- வின் பேட்டி இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் உள்ள உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகிறது.
ஒரேவிதமான கேள்விகளுக்கு இவர்கள் ஏழு பேரும் அளித்திருக்கும் விதவிதமான பதில்கள் சிந்திக்க வைக்கின்றன. பதேர் பாஞ்சாலியின் திரைக்கதையைப் படித்துவிட்டு அந்தப் படத்தைப் பாருங்கள். வார்த்தைகள் எப்படி அதிசயிக்க வைக்கும் காட்சிகளாக மாறுகின்றன என்பது புரியும் என்று அணிந்துரையில் ஒளிப்பதிவாளர் செழியன் எழுதியிருப்பது திரைப்படக் கல்வி பயிலும்மாணவர்களுக்கு உதவிகரமான ஓர் ஆலோசனை. சினிமாவின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அனைத்துக் கலைஞர்களுக்கும் அறிவு விருந்து அளிக்கும் நூல்.
நன்றி: தினமணி, 30/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818