சிராப்பள்ளி மாவட்டக் கோயில் வரிசை நூல்கள்
சிராப்பள்ளி மாவட்டக் கோயில் வரிசை நூல்கள், மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், மொத்த விலை: ரூ.1,300
திருச்சிராப்பள்ளியை மையமாகக் கொண்டு இயங்கும் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பணிகள் முக்கியமானவை. சமீபத்தில், இந்த வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் அர.அகிலா, மு.நளினி, இரா.கலைக்கோவன் ஆகியோர் இணைந்து திருச்சிராப்பள்ளியின் முக்கியமான கோயில்களினுடைய வரலாற்றையும் கலைச் சிறப்புகளையும் கல்வெட்டுச் சான்றாதாரங்களோடு ஐந்து தொகுப்புகளாக வெளியிட்டுள்ளனர்.
அவை ‘சோளர் தளிகள் ஏழு’, ‘சோழர் தளிகள் நான்கு’, ‘எறும்பியூர் துடையூர் சோழர் தளிகள்’, ‘பாச்சிள் கோயில்கள்’, ‘தவத்துறையும் கற்குடியும்’. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியையும் மையப்படுத்தி இத்தகு ஆய்வு நூல்கள் வந்தால் எப்படி இருக்கும் என்ற பேராவலுக்கு வித்திடும் ஆவணம்.
நன்றி: தமிழ் இந்து, 20/1/2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818