கர்த்தரின் நாமத்தில்

கர்த்தரின் நாமத்தில், சகோதரி லூசி களப்புரா, தமிழில் ஜி.வி.ரமேஷ்குமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 128, விலை 130ரூ.

நுாலாசிரியர் ஜி.வி.ரமேஷ்குமாரின் நான்காவது படைப்பு இது. மலையாளத்தில் வெளிவந்த சகோதரி லுாசி களப்புராவின், ‘கர்த்தரின் நாமத்தில்’ என்ற நுாலை தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.

கேரள கிறிஸ்துவ மிஷனரிகளில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம், ஆணாதிக்க மனநிலை, பெண் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக துணிச்சலாக குரல் எழுப்பியவர் கன்னியாஸ்திரி லுாசி களப்புரா; அவரின் வாழ்க்கை கதையே இந்த நுால்.

மலையாளத்தில் அவர் எழுதியதை அப்படியே நேர்கோட்டு வார்த்தைகளில் தமிழாக்கம் செய்துள்ளார். கிறிஸ்துவ சபைகளில், ஆலயங்களில் அந்த சகோதரிக்கு ஏற்பட்ட பிரச்னைகளை மிகைப்படுத்தாமல், கவனமாக மொழிபெயர்த்துள்ளார்.

கன்னியாஸ்திரிகள் சுதந்திரமானவர்கள் என்று பரவலாக பரப்பப்பட்டாலும், ஆணாதிக்கத்திற்கு கீழ் தான் அவர்கள், ஒவ்வொரு கன்னியாஸ்திரிகளின் வாழ்க்கையும் போராட்டங்கள் நிறைந்தது தான் என்ற அந்த சகோதரியின் வார்த்தைகளை உயிரோட்டமாக தந்துள்ளார் நுாலாசிரியர்.

கன்னியாஸ்திரியாக பார்க்காமல், ஒரு பெண்ணாக தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சகோதரி விளக்கிச் சொல்வது, வேதனை கலந்த உணர்வை ஏற்படுத்துகிறது. படிக்கவேண்டிய புத்தகம் இது.

– எம்.எம்.ஜெ.,

நன்றி: தினமலர், 2/2/2020

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *