காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும், ப.திருமாவேலன், பரிசல் வெளியீடு, விலை: ரூ.140
காமராஜருக்கு முன்பே திராவிட இயக்கத்தால் தீவிரமாக ஆதரிக்கப்பட்ட காங்கிரஸ் முதல்வர், ஓமந்தூர் ராமசாமி. இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதாலும், ஆலய நிர்வாகங்களில் அரசின் கண்காணிப்பை வலுப்படுத்தியதாலும் உள்கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகளைச் சந்தித்த அவர், உள்கட்சிப் போட்டியில் தோல்வியடைந்து, முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.
தீவிர காந்தியராகவும் பழுத்த ஆன்மீகவாதியாகவும் விளங்கிய ஓமந்தூராரை ஆதரித்து, 1948 ஏப்ரலில் ‘திராவிட நாடு’ இதழில் அண்ணா எழுதிய இரண்டு தலையங்கங்கள் வகுப்பு துவேஷத்தைத் தூண்டிவிடுவதாய்க் குற்றஞ்சாட்டப்பட்டு ரூ.3,000 பிணை கோரப்பட்டது.
அந்த இரண்டு தலையங்கங்களை முன்வைத்து, ஓமந்தூராரின் உயரிய அரசியல் வாழ்க்கையையும், அன்றைய காங்கிரஸ் குழுச் சண்டைகளையும், அவற்றின் பின்னாலிருந்த நோக்கங்களையும் விளக்கியிருக்கிறார் பத்திரிகையாளர் ப.திருமாவேலன்.
– செ.இளவேனில்
நன்றி: தமிழ் இந்து,7/12/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818