தர்மேந்திரா மக்கள் கலைஞன்
தர்மேந்திரா மக்கள் கலைஞன், அப்சல், இருவாட்சி, விலைரூ.200
ஹிந்தி நடிகர் தர்மேந்திரா பற்றிய நுால். அவருடன் பணியாற்றிய, நடிகர்கள், நடிகையர், இயக்குனர்கள்,பாடலாசிரியர்கள், பாடகர்கள் குறித்த அரிய தகவல்கள் அடங்கியுள்ளன.
தர்மேந்திரா நடித்த, 283 திரைப்படங்களின் பட்டியல், கவுரவ வேடத்தில் நடித்த படங்கள்,ஊதியம் வாங்காமல் நடித்தவை, விருது பெற்றவை, சிறந்த, 13 படங்கள், அதன் புகைப்படங்கள், இந்நுாலில் இடம் பெற்றுள்ளன.
மேலும், எந்தெந்த தமிழ் படங்கள், ஹிந்தியில் ‘ரிமேக்’ செய்து, அதில் தர்மேந்திரா நடித்துள்ளார், இவருடன் நடித்த தமிழ் நடிகர்கள், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் விவரிக்கிறது. சினிமாவை ரசிப்பவர்களுக்கு இந்நுால் பொக்கிஷம்.
– டி.எஸ்.ராயன்
நன்றி: தினமலர், 25/10/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818