இறையுதிர்காடு

இறையுதிர்காடு,  இந்திரா சௌந்தர்ராஜன், பக்.1104, (2 தொகுதிகள்); விகடன் பிரசுரம், விலை ரூ.1350;

இறையுதிர் காடு- ஆனந்த விகடனில் 87 அத்தியாயங்களுடன் தொடராக வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது என்றால் அது மிகைஅல்ல.

சித்தர்களில் போற்றுதலுக்குரியவரும், பிரசித்திப் பெற்றவருமானவர் போகர். பாஷாணங்களின் சேர்மானத்தை நேர்த்தியாக கையாள்வதில் வித்தகர்.

பழனிமலை முருகப் பெருமானுக்கு நவபாஷாணத்தாலான சிலையொன்றை உருவாக்கியவர். அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம். முன்னதாக சோதனை முயற்சியாக லிங்கமொன்றை உருவாக்கினார். சிலையை மலைக்கும், லிங்கத்தை உலக வெளிக்கும் என நிர்மாணித்தார்.

சிலை வடிக்கும் பணிக்காலத்தில் போகரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் தந்த பதில்கள், முருகன் பற்றிய வியத்தகு செய்திகள், இறையுதிர் காடு -என்பதற்கான விளக்கம் என நல்ல தமிழ் நடையில் அன்று என்ற பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன.

போகர் உருவாக்கிய நவபாஷாண லிங்கம் இன்றையச் சூழலில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை சுவைபடவும், ஆங்காங்கே ஆங்கில வார்த்தைகளை நிரவி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் புதுப்புது திருப்பங்களுடன் புனையப்பட்டதுதான் பகுதி-இன்று பத்திரிகையாளரான பாரதியைச் சுற்றி தொடங்குகிறது கதை. மக்களவை உறுப்பினரான அவரது தந்தை அதிகாரபலத்தால் அப்பாவியின் சொத்தை போலி பத்திரம் மூலம் அபகரிப்பது, அவருக்குத் துணையாக இருந்த ரௌடி, போலீஸ் அதிகாரி அடுத்தடுத்து இறந்திட, எம்.பியும் விபத்தில் சிக்கினார். இதற்கு இறந்துபோன அப்பாவியின் ஆவிதான் காரணம் என கதையில் விறுவிறுப்பு தொடங்குகிறது.

இதற்கிடையே ஜமீன் உடையாருக்குச் சொந்தமான பங்களாவை விலைக்கு வாங்கி சிலர் ஜமீன்தாரின் சமாதியை இடிக்க முயல அப்போது நீண்டு நெடிய பாம்பு அவர்களைத் துரத்துகிறது. இப்படி மர்ம நாவலுக்குரிய தன்மைகளுடன் சுவாரசியமாக விறுவிறுப்புடன் படிக்கும்படி இந்நூல் உள்ளது.

ஸ்யாமின் அசத்தலான ஓவியங்களும் அழகிய வடிவமைப்பும் கண்ணைக் கவர்கின்றன.

நன்றி: தினமணி, 1/3/21.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *