உயிர் வளர்க்கும் திருமந்திரம் – 2
உயிர் வளர்க்கும் திருமந்திரம் – 2, கரு.ஆறுமுகத்தமிழன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.225
திருமந்திரம் திருமுறைகளில் வரிசைப்படுத்தப்பட்டாலும் அது முன்னிறுத்துவது மெய்யியல் விசாரணையைத்தான். உலகின் தோற்றத்தை, அதன் இயக்கத்தை, உயிரை, உடலை, உணர்வை விரிவாகப் பேசும் திருமந்திரம் சைவ சித்தாந்தத்துக்கு மட்டுமல்ல; தமிழ் சித்தர் மரபுக்கும் மூல நூல். ‘ஆனந்தஜோதி’ இணைப்பிதழில் வாரந்தோறும் இலக்கியமும் மெய்யியலும் பின்னிப் பிணைந்த தனிநடையில் கரு.ஆறுமுகத்தமிழன் எழுதி புத்தகமாக வெளியான முதல் தொகுப்பானது வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்போது இரண்டாம் பாகம் வந்திருக்கிறது. யோக முறைகள் தொடங்கி துமிகளின் இயற்பியல் (particle physics) வரை எளிமையும் கவித்துவமும் கொண்ட நடையோடு ஆராயும் இந்நூல், பொருள்சார் வாழ்க்கைக்கு அப்பால் கேள்விகளையும் தேடலையும் தொடங்கும் எந்தச் சமயத்தவருக்கும், உண்மையை நோக்கிப் பயணப்பட ஆசைப்படும் எவருக்கும் கைவிளக்காகும்.
நன்றி: தமிழ் இந்து, 9/1/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030934_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818