கர்ணன்: காலத்தை வென்றவன்
கர்ணன்: காலத்தை வென்றவன், சிவாஜி சாவந்த், தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் வெளியீடு, விலை: ரூ.899.
இந்திய இலக்கிய மரபில் அதிக நிழற்பிரதிகளைக் கொண்ட பேரிலக்கியம் மகாபாரதம். அச்சு யுகத்தில் மகாபாரதத்தின் வெவ்வேறு நிழற்பிரதிகள் அதிக அளவில் உருவாகத் தொடங்கின. நவீன இலக்கியம் மகாபாரதத்தைத் தொடர்ந்து மீள்வாசித்துவருகிறது. அவ்விலக்கியத்தின் கதாபாத்திரங்கள் குறித்துத் தனித்தனிப் புனைவுகள் தொடர்ந்து எழுதப்படுகின்றன. அவ்வகையில், கர்ணனைப் பற்றி மராட்டிய எழுத்தாளர் சிவாஜி சாவந்த் எழுதிய நாவல் ‘மிருத்யூஞ்ஜயா’.
இதை ‘கர்ணன்: காலத்தை வென்றவன்’ என்ற பெயரில் சிறப்பாகத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். மகாபாரதத்தில் திரௌபதிக்கு அடுத்து அதிகத் துயரங்களைச் சந்தித்தவன் கர்ணன். ஒடுக்கப்பட்ட இனக்குழுவான சூதர்களின் பிரதிநிதியாகத் தன் குரலை சத்ரியர்களுக்கு எதிராக ஒலித்தவன்.
அந்தக் குரலைத் தற்காலக் குரலாகக் கேட்க வைத்திருக்கிறார் சிவாஜி சாவந்த்.
நன்றி: தமிழ் இந்து, 23/1/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818