இந்திய பாரம்பரியத்தில் சுவை
இந்திய பாரம்பரியத்தில் சுவை, முனைவர் லட்சுமி ராமசுவாமி, ஸ்ரீ முத்ராலயா, விலைரூ.500
பிரபல நடனக் கலைஞர் லட்சுமி ராமசுவாமி கைவண்ணத்தில் உருவாகியுள்ள அரிய ஆய்வு நுால். தமிழ் மற்றும் சமஸ்கிருத பாரம்பரியங்களில், ‘சுவை’ பற்றிய ஒப்பீட்டை வழங்குகிறது. ஆடற்கலை பற்றிய சங்க கால சாத்தனாரின் கூத்த நுாலை, பல சமஸ்கிருத நுால்களோடு ஒப்பாய்வு செய்து, அரிய தகவல்களை தந்துள்ளார்.
நாட்டியக்கலை நுணுக்கங்களை கூறுவதாக இருந்தாலும், நாட்டியக் கலையையே அறியாதவர் கூட புரியும் வகையில் எளிமையாக தந்திருப்பது பாராட்டத்தக்கது. நடனக் கலையில் மிளிர விரும்புவோருக்கான ஆதார தகவல் களஞ்சியம். ஆடற்கலையின் அற்புதங்களை அறிய விரும்பும் நடன ஆசிரியர்கள், மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நுால். தமிழ்த்தாய்க்கு அணி சேர்க்கிறது.
– ஜி.வி.ஆர்.,
நன்றி: தினமலர், 29/12/20.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030806_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818