ஓம் சக்தி!

ஓம் சக்தி! தமிழக சக்தி பீடங்கள், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160.

ஓம் சக்தி என்ற இந்த புத்தகத்தில் அம்மன்களின் வரலாறும், சிறப்பும் தொகுக்கப்பட்டு உள்ளது. அனைத்திற்கும் ஆதியானவள் அன்னை காமாட்சி காஞ்சியிலே குடியிருக்கும் விதம், ஆதிசங்கரர் கோவிலை அமைத்த விதம், தீய சக்திகளிடம் இருந்து பக்தர்களை காத்தருளிய கருணை ஆகியவற்றை ஆசிரியர் பிரபுசங்கர் குறிப்பிடுகிறார். அன்னை காமாட்சியின் அருள் கிடைப்பதற்கான ஸ்லோகங்களையும் விவரிக்கிறார்.

இரண்டாவதாக அன்னை மீனாட்சியின் அருளை புத்தகத்தில் வாரி வழங்குகிறார். அன்னையின் வரலாறு, மதுரையின் பெருமை, திருவிழாக்கள் என ஒவ்வொரு நிகழ்வையும் வழிகாட்டி போல விவரித்து கொண்டு செல்கிறார்.

திருவானைக்காவில் குடியிருக்கும் அகிலாண்டேஸ்வரி, குற்றாலத்தின் பராசக்தியாம் குற்றால நாயகி, திருவாரூரில் வீற்றிருக்கும் கமலாம்பிகை மற்றும் கன்னியாகுமரியில் பகவதியாக வீற்றிருக்கும் குமரியன்னை என, சக்தியின் சொரூபத்திற்கு கதையும் காரணமுமாக விளக்கி சொல்லியுள்ளார்.

அன்னையின் பக்தர்கள் படித்து ஆனந்த கூத்தாட வேண்டிய புத்தகம் இது.

– எம்.எம்.ஜெ.,

நன்றி: தினமலர், 16/5/21

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031410_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *