கூடு
கூடு, கலைச்செல்வி,யாவரும் பதிப்பகம், விலை: ரூ.190.
எந்த வாழ்க்கையையும் வாழப் பழகிக்கொள்ளும் பெண்களைத்தான் கலைச்செல்வி தம் புனைவுகளில் தொடர்ந்து முன்னிலைப்படுத்துகிறார். இவருடைய சிறுகதைகள் மொழியின் மீது மௌனத்தை ஏற்றுபவை. சமூக அறத்தை மீறும் நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளாகவும் இவரது புனைவுகளை உள்வாங்கிக்கொள்ளலாம்.
எல்லாக் கதைகளின் மீதும் ஒரு மெல்லிய மூடுபனி படர்ந்திருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது. தொடக்க காலக் கதைகளில் இந்தத் தன்மை இல்லை; ஒரு தெளிவான நிலமும் கதையும் இருந்தன. இந்தத் தொகுப்பில் தன்னையே அவர் கடந்திருக்கிறார்.
நன்றி: தமிழ் இந்து, 24/4/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031070_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818