தமிழ் இலக்கியத்தின் வரலாறு
தமிழ் இலக்கியத்தின் வரலாறு, பால.இரமணி, ஏகம் பதிப்பகம், பக்.184, விலை ரூ.150.
தமிழ் இலக்கியத்தின் வரலாறு குறித்து இதிலுள்ள எட்டு கட்டுரைகளும் அழுத்தமாகவும், ஆழமாகவும், சுருக்கமாகவும் செவ்விலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சொல்லிச் செல்கின்றன.
“தமிழில் இதுவரை பல இலக்கிய வரலாறுகள் வெளிவந்துள்ளன. ஆனால் இலக்கியத்தின் வரலாறு உரைக்கும் முதல் நூல், முன்னோடி நூல் இது ஒன்றுதான்’ என்று வ.நாராயண நம்பி பதிவு செய்துள்ளது போலவே, 184 பக்கங்களில் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை மிகமிக எளிமையாக எடுத்துரைக்கும் நூல் இதுவாகத்தான் இருக்கும். காப்பியம், சிற்றிலக்கியம், பேரிலக்கியம், கவிதை, கதை, இசைத் தமிழ், நாடகத் தமிழ், இணைய தமிழ் என அனைத்தும் நல்ல விளக்கம் பெற்றுள்ளன.
“வானொலி, தொலைக்காட்சி ஆகிய அமைப்புகளைக் காட்டிலும் முகநூலில் காணக் கிடக்கும் தமிழ் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள், இலக்கியத்தின் வரலாற்றிற்குக் கிடைத்துள்ள ஆவணங்கள்’ என்று “இன்றும் என்றும் இணைய தமிழ்’ கட்டுரையில் பெருமிதத்துடன் பதிவிட்டிருக்கிறார்.
“தமிழ்மொழி வரும் காலங்களில் உச்சத்தைத் தொட்டுச் செல்லும்’ என்று திண்ணமாகக் கூறி நூலை நிறைவு செய்யும் நூலாசிரியரின் விருப்பம் விரைவில் நிறைவேற வேண்டும்.
நன்றி: தினமணி, 4/10/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818