என்னை நானே பார்த்தேன்
என்னை நானே பார்த்தேன், அனு. வெண்ணிலா, திருப்பூர் குமரன் பதிப்பகம், விலைரூ.250.
தாங்கொணாத் துயரங்கள் தாக்கிய தருணங்களில் சொல்லி அழக்கூட ஒரு துணை இல்லாக் காலங்களின் போதும், இறையருளின் வெளிச்சக்கீற்றுகள் உதவியிருப்பதை பக்தியின் பாதையில் உணர்ந்து கொண்டேன்.
ஊரும் உறவுகளும் அந்நியமாகிப் போன நிலையில், தக்க சமயத்தில் உதவியும் ஊக்கமும் பெற என் தாய்த்தமிழ் எனக்கு பெரிதும் உதவியது என சுயமரியாதை இயக்கக் குடும்பத்தில் பிறந்து, ஆற்றுப்படுத்த ஆளில்லாமல் தனிமையில் போராடி, ஆன்மிக வயப்பட்டு மகான்களையும் தரிசித்து, சொந்த ஆன்மிக அனுபவங்களை பதிவு செய்துள்ளார்.
முழுமையும் சொந்த அனுபவத்தில் இலக்கியம் நெய்யப்பட்டிருப்பது இயல்பாகவும், இதயத்தைத் தொடுவதாகவும் அமைந்துள்ளது.
– பின்னலுாரான்
நன்றி: தினமலர், 5/9/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031624_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818